சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கி வரும் தொற்று நோய்களுக்கான மருத்துவமனையில் பயிற்றுவிக்கப்பட உள்ள (Communicable Diseases Hospital, Tondiarpet) இரண்டு ஆண்டுகள் கால அளவு கொண்ட ஏஎன்எம் செவிலியர் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இதற்கு விண்ணபிக்கலாம்.அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த படிப்புக்கு விண்ணபிக்க விரும்புவோர் ரூ. 50 கட்டணம் செலுத்தி சிடிஎச் இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
வயது வரம்பு : பொது பிரிவினருக்கு 17 -32, பிற்படுத்தப்பட்டோருக்கு17 -35 வயது
விண்ணப்பங்கள் வழங்கும் தேதி: ஜூலை 2-10 வரை.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தண்டையார்பேட்டையில் இருக்கும் தொற்று நோய்களுக்கான மருத்துவமனையில் சமர்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களும் 044-25912686, 25912687 இந்த எண்களை தொடர்பு கொண்டு விபரங்களை அறியலாம்.


Click it and Unblock the Notifications












