சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாவது எப்போது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது மாணவச் செல்வங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு https://cbseresults.nic.in/ என்ற இணையதள முகவரியை மாணவர்கள் தொடர்புகொண்டு அறியலாம்.
தமிழக பாடத்திட்டத்தின் அடிப்படையிலான 10, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ளது. பிளஸ் 2 முடிவுகள் மே 6-ம் தேதியும், 10-ம் வகுப்பு முடிவுகள் வரும் 10-ம் தேதி ரிலீஸாகவுள்ளன. இதையடுத்து சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் காத்திருந்தனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கின.
10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 13-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2-ம் தேதியும் முடிவடைந்தன. இந்த ஆண்டு 12.38 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.

கடந்த சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு 20 லட்சமத்துக்கும் அதிகமான மாணவ- மாணவிகள் எழுதியிருந்தனர். இதில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை கடந்த 2023-ம் ஆண்டில் 14 லட்சத்துக்கும் அதிகமான மாணவச் செல்வங்கள் எழுதியிருந்தனர். இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 90.68 ஆக இருந்தது.
கடந்த ஆண்டு மே 12- தேதி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது நினைவிருக்கலாம்.
இ நிலையில், சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் ஆவலுடன் உள்ளனர். இதைத் தொடர்ந்து மே மாதம் முதல் தேதியே தேர்வு முடிவு வெளியாகும் என்று இணையத்தில் செய்தி வந்தது. ஆனால் அந்தத் தகவல் போலியானது சிபிஎஸ்இ விளக்கம் அளித்தது.
இந்நிலையில் மாணவர்களின் ஆவலுக்கு பதில் அளிக்கும் வகையில், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதிக்குப் பின்னரே வெளியாகும் என்று சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
இணையதள முகவரி:
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், cbseresults.nic.in, results.cbse.nic.in மற்றும் cbse.gov.in என்ற இணையதளங்களை கிளிக் செய்து மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.
வரும் 2025- 26 கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வு முறையை அறிமுகம் செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான பணிகளை சிபிஎஸ்இ தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் செமஸ்டர் முறையை அறிமுகம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு https://cbseresults.nic.in/ என்ற இணையதள முகவரியை மாணவர்கள் தொடர்புகொண்டு அறியலாம். தேர்வு முடிவு தேதிகள் வெளியான நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












