ஆர்.யூ.,ரெடி யூத்ஸ்... சென்னை டூ புதுச்சேரிக்கு 'பீர்' பஸ்ஸில் போலாமா?

புதுச்சேரி என்றதும் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது 'சரக்கு'. விடுமுறையை 'என்ஜாய்' பண்ண நினைக்கும் பெரும்பாலான யூத்ஸ் மற்றும் சென்னைவாசிகள் முதலில் போக சூஸ் பண்ணும் இடம் புதுச்சேரி. அவர்களுக்காகவே, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு, 'பீர்' பஸ் என்ற சுற்றுலா திட்டத்தை தனியார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அந்த என்னங்க 'பீர் பஸ்'... விரிவாக தெரியும்? வாங்க கட்டுரைக்கு உள்ளே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்.

வார இறுதி நாட்கள், பண்டிகை விடுமுறை நாட்களில், பொழுதை கழிக்க விரும்பும் நபர்கள் தேர்வு செய்யும் முதல் இடம் புதுச்சேரி. அதற்கு காரணம், அங்குள்ள விதவிதமான மதுக்கடைகள், மது அருந்தும் வசதியுடன் கூடிய பார்களும், கடற்கரைகள் அழகும், உள்ளூர் மற்றுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளையும் அதிகம் ஈர்க்கிறது.

பீர் பஸ்சில் ஒரு ரவுண்ட் போகலாம்?

அதிரி புதிரி அறிவிப்பு வேற...!

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக, புதுச்சேரி அரசு பல்வேறு புதிய திட்டங்கள், வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

உணவு சாப்பிடும் ரெஸ்டாரண்டுகள், பாரம்பரிய வீடுகள் என, அனைத்திலும் 'சுற்றுலா' என்ற பெயரில்,'ரெஸ்டோபார்கள்' திறக்க, அரசு அனுமதி அளித்து வருகிறது.

நாங்களும் அறிவிப்போம்ல...!

அந்தவரிசையில், புதுச்சேரியை சேர்ந்த 'கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி' என்ற நிறுவனம், புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, மது பிரியர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு, ஏப்.,22ல் 'பீர் பஸ்' சுற்றுலா செல்லலாம்.

நபருக்கு மூன்றாயிரம் ரூபாய் கட்டணத்தில், பல விதமான உணவு வகைகளை சாப்பிட்டவாறே, புதுச்சேரி அழகை சுற்றி பார்த்து ரசிக்கலாம்.

இது குறித்து, அந்நிறுவனம் ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:

'பிரே அவுஸ் டூர்' என்ற பெயரில், இத்திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. 'பீர் பஸ்' என அழைப்பதால், பஸ்ஸில் மதுபானங்களை குடிக்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். பஸ்சில் பீர் குடிக்க அனுமதி இல்லை.

ஆனால், புதுச்சேரி அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தில், பஸ் நிறுத்தப்படும். அங்குள்ள இடத்தில் பீர் குடிக்க அனுமதிக்கப்படும்.

சென்னையில் இருந்து, 35 முதல் 40 சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு அழைத்து செல்லப்பட்டு, அன்றைய தினமே மீண்டும் சென்னை திரும்பலாம். அன்றாட வேலைகளில் மூழ்குபவர்கள், அவர்களை வார விடுமுறையில் 'ரிலாக்ஸ்' ஆக்கி கொள்ள, இந்த சுற்றுலா உதவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Beer Bus Registration 2023: A private company from Puducherry has introduced a tourist project called 'Beer' bus at a fee of three thousand rupees. During the 'Beer Bus' tour, you can taste a variety of food. RU Ready To Go Pondy Tour...!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+