இந்திய மாணவர்களுக்கு ஆன்-லைன் பொறியியல் கல்வி... கலிபோர்னியா பல்கலை. அறிமுகம்!!

சென்னை: இந்திய மாணவர்களுக்கு ஆன்-லைனில் பொறியியல் கல்வியை கலிபோர்னியா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவிலுள்ள பொறியியல் நிபுணர்களுக்கு இந்தப் படிப்பை கலிபோர்னியா பல்கலை. அறிமுகம் செய்துள்ளது. இது பட்டமேற்படிப்பாகும்.

இந்திய மாணவர்களுக்கு ஆன்-லைன் பொறியியல் கல்வி... கலிபோர்னியா பல்கலை. அறிமுகம்!!

என்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்தப் படிப்பை ஆன்-லைனில் பதிவு செய்து படிக்க முடியும்.

இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்தப் படிப்பு வரப்பிரசாதமாக அமையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் படிப்புக்கு மாஸ்டார் ஆஃப் சயின்ஸ் ஆன்-லைன் புரோகிராம் (எம்எஸ்ஓஎல்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படிப்பை 2 ஆண்டுகளில் படித்து விட முடியும். இதன்மூலம் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்க முடியும். கட்டணமாக 35 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பானது பல்கலைக்கழகத்தில் நேரில் சேர்ந்து படிக்கும் படிப்புக்கு ஈடானதாகும். இந்தப் படிப்பை இந்தியாவில் டாக்டர் சஞ்சய் சிங் (வின்வெஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர்) ஒருங்கிணைத்து வருகிறார். அவரை msol.ucla.edu/international என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ள முடியும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Engineers in India can advance their knowledge, skill sets and career opportunities with master's degrees from the University of California at Los Angeles' #1 ranked in Master of Science Online programme The programme has a strong impact on employees of leading Indian MNCs.Employees have learnt cutting-edge research and creative problem-solving from UCLA's world-renowned faculty.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X