பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு!!

Posted By:

சென்னை: தொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என பிஎஸ்என்எல் அறிவுறுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு!!

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 147 இடங்கள் காலியாகவுள்ளன. இதில் எஸ்சி பிரிவுக்கு 25-ம், எஸ்டி பிரிவுக்கு 77-ம், ஓபிசி பிரிவுக்கு 45-ம் வழங்கப்படும்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற மத்திய அரசு, மாநில அரசு தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டிலிருந்து 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படித்து முடித்திருக்கவேண்டும்.

வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் டிசம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Bharat Sanchar Nigam Limited (BSNL) invited applications from SC, ST and OBC candidates for recruitment to the posts of Telecom Technical Assistant. The candidates eligible for the post can apply online through prescribed format on or before 10 December 2015. BSNL Vacancy details: Name of the Post: Telecom Technical Assistant- 147 Posts (SC-25; ST-77; OBC-45) Eligibility Criteria for BSNL Telecom Technical Assistant Job: Educational Qualification: Three years Engineering Diploma in any of the following disciplines from a Central Govt./ State Govt. recognized institution:- Telecommunications Electronic Electrical Radio Computer Instrumentation Information Technology.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia