பிஎச்இஎல் நிறுவனத்தில் மேலாளர் பதவி... ஜனவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்!

Posted By:

சென்னை: பாரத மிகுமின் நிறுவனத்தில்(பிஎச்இஎல்) மேலாளர், துணை மேலாளர், மூத்த மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிறுவனமான இது 1964-ல் தொடங்கப்பட்டது. மின்சார உபகரணங்கள், கருவிகளைத் தயாரித்து வழங்குகிறது இந்த நிறுவனம்.

பிஎச்இஎல் நிறுவனத்தில் மேலாளர் பதவி... ஜனவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்!

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேலாளர் பணியிடங்கள் 2-ம், துணை மேலாளர் பணியிடங்கள் 3-ம், மூத்த மேலாளர் பணியிடங்கள் 6-ம் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணபப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.bhel.com என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Bharat Heavy Electricals Limited (BHEL) invited applications from experienced law professionals for recruitment to the posts of Deputy Manager, Manager and Sr. Manager. The candidates eligible for the post can apply through the prescribed format on or before 02 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia