பிஇ படிப்புகளுக்கான கவுன்சிலிங் வெறிச்சோடி கிடக்கின்றது ஒரு இலட்சம் இடங்கள் காலி!!

By Sobana

பரிதாப நிலையில் பொறியியல் கவுன்சிலிங் இன்னும் மூன்று நாட்களில் பொறியியல் கவுன்சிலிங் முடியப்போகின்றது ஆனால் இதுவரை கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கையானது வெறும் 70 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர்.

 பிஇ படிப்புகளுக்கான கவுன்சிலிங்க ஆகஸ்ட் 11 ஆம் நாள் முடிவடைகிறது

 

ஒரு லட்சத்திற்கு மேற்ப்பட்ட பொறியியல் இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன. பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 23 ஆம் நாள் தொடங்கியது ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் முடிவடையும் ஆனால் இதுவரை பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் இணைந்த மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகும் . பொறியியல் பிரிவு மாணவர்கள் இடங்கள் 1, 75,456 இடங்களை நிரப்பபட இருந்தது 1,08,690 பேர் அழைக்கப்பட்டனர்.

இதுவரை 70ஆயிரத்து 741 பேர் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்று கல்லுரி சேர்க்கைக்கான இடங்களை பெற்றுள்ளனர் . 30 ஆயிரத்து மேற்ப்பட்டோர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 481 பேர் இடங்களை தேர்வு செய்வதை தவிர்த்துவிட்டனர்.

கவுன்சிலிங்கில் பங்கேற்றவர்களில் 14751 பேர் பிஇ இயந்தரவியல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர். 13,881 பேர் பிஇ மின்னணுவியல், தொடர்பியல் பிரிவையும், 11 ஆயிரத்துக்கு மேல் உள்ளோர் கணினி அறிவியலையும் தேர்ந்தெடுத்துள்ளனர் . பிஇ சிவில் பிரிவில் 25, 257 இடங்கள் உள்ளன ஆனால் 6234 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.

பிஇ தமிழ்வழியில் படிக்க 719 இடங்கள் உள்ளன ஆனால் 205 இடங்கள் மட்டுமே மாணவர்கள் படிக்க தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழ்வழி சிவில் பாடம் படிக்க 659 இடங்களில் 168 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன . பொறியியல் கல்லுரிகள் வெரிச்சோடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . 1 லட்சம் இடங்கள் காலியாகும் போது எத்தனை கல்லுரிகள் மூடப்படும் நிலைக்கு வரும் என்று இனிமேல் தெரியவரும் .

மாணவர்கள் பொறியியல் பாடங்கள் படிப்பதும் அதனால் வேலையின்றி அவலப்படும் நிலையரிந்து மாணவர்கள் இன்றைய காலகட்டங்களில் மனநிலை மாற்றம் தெரியவருகின்றது . அவர்களின் விருப்பமும் மாறிவருகின்றது .

சார்ந்த பதிவுகள்:

 

இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது .கல்லுரிகளின் தரவரிசை விரைவில் வெளியிடப்படும்

பொறியியல் கவுன்சிலிங் நிறுத்த சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு

அண்ணா பல்கலைகழகத்தின் அறிவிப்புபடி செப்டம்பர் 3 பொறியியல் வகுப்புகள் தொடங்குகின்றன

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article tell about engineering counselling admissions many sheets are not filled by students
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X