சென்னை: பேங்க் ஆஃப் இந்தியாவில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 8-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மொத்தம் 77 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் மார்ச் 8-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பவேண்டும். பொது மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.600 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்தவேண்டும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.bankofindia.co.in/english/home.aspx என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

