ஆகஸ்டு 22-முதல் சேலத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்!

ஆகஸ்டு 22-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை சேலத்தில் ராணுவத்திற்கான ஆட் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

By Kani

சேலத்தில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் வருகிற ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஆகஸ்டு 22-முதல் சேலத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்!

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,

இந்த ஆள் சேர்ப்பு முகாமில் சேலம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து தகுதிவாய்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.

சோல்ஜர் டெக்னிக்கல், நர்சிங் அசிஸ்டென்ட், ஜெனரல் டியூட்டி, கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆன்லைனில் ஜூலை 8-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆகஸ்டு மாதம் 10-ந் தேதிக்கு பின் தகுதியான நபர்களுக்கு இணையதளத்தில் அனுமதி சீட்டு வழங்கப்படும்.

இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள இளைஞர்கள் எவ்வித இடைத்தரகர்களையும் நம்ப வேண்டாம் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே இப்பணிக்கான நபர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளதாகவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

ரூ.50,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!ரூ.50,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Army recruitment rally in Salem from Aug. 22
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X