அசத்தும் சென்னை ஐஐடி! தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக தேசிய அளவில் முதலிடம்!

மத்திய அரசின் சார்பில் புதிய கண்டுபிடிப்புகளில் தேசிய அளவில் தலைசிறந்து செயல்பட்டு வரும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் புதிய கண்டுபிடிப்புகளில் தேசிய அளவில் தலைசிறந்து செயல்பட்டு வரும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அசத்தும் சென்னை ஐஐடி! தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக தேசிய அளவில் முதலிடம்!

இதில், சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து, மும்பை, தில்லி, கான்பூர், ரூர்க்கி ஐஐடி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

அடல் தரவரிசை

அடல் தரவரிசை

மத்திய கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிறுவனங்களின் (ஏஆர்ஐஐஏ) அடல் கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியலை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் வெளியிட்டுள்ளார்.

மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்

மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்

இந்த பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில், கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் பேசுகையில், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உயர் கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்களும் பாடப் புத்தகங்களைத் தாண்டி மாணவர்களுக்கு புதிய சிந்தனைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பல்கலைக் கழகம், கல்லூரிகளில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு, வணிக மயமாக்கல், தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்றார்.

மூன்றாம் முறையாக முதலிடம்

மூன்றாம் முறையாக முதலிடம்

இதனைத் தொடர்ந்து, ARIIA Atal தரவரிசையில் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக முதலிடம் பிடித்த சென்னை ஐஐடியின் இயக்குநரும், பேராசிரியருமான பாஸ்கர் ராமமூர்த்தி பேசுகையில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான அடல் தரவரிசையில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார்.

மத்திய பல்கலைக்கழகங்கள்

மத்திய பல்கலைக்கழகங்கள்

இந்த தரவரிசை பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இடம்பிடித்த மத்திய பல்கலைக் கழகங்கள் வரிசை.

  1. சென்னை ஐஐடி
  2. மும்பை ஐஐடி
  3. தில்லி ஐஐடி
  4. கான்பூர் ஐஐடி
  5. ரூர்க்கி ஐஐடி
  6. இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு
  7. ஹைதராபாத் ஐஐடி
  8. கரக்பூர் ஐஐடி
  9. தேசிய தொழில்நுட்ப நிறுவனம், கோழிக்கோடு
  10. மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனம், அலகாபாத்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள்

ARIIA Atal தரவரிசையில் பங்கேற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக் கழகங்கள் பட்டியலில் அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனம் தேசிய அளவில் 5ம் இடத்தை பிடித்துள்ளது.

  1. பஞ்சாப் பல்கலைக்கழகம்
  2. தில்லி தொழில்நுட்ப பல்கலை
  3. நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப பல்கலை
  4. சௌதரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலை.
  5. அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனம் (தமிழ்நாடு)
  6. ரசாயன தொழில்நுட்ப நிறுவனம், மும்பை
  7. குஜராத் தொழில்நுட்ப பல்கலை.
  8. சாவித்ரிபாய் புலே பல்கலை. புனே
  9. குஜராத் பல்கலை.
  10. பெரியார் பல்கலை. (தமிழ்நாடு)
பிஎஸ்ஜி கல்லூரி இரண்டாம் இடம்

பிஎஸ்ஜி கல்லூரி இரண்டாம் இடம்

அடல் தரவரிசைப் பட்டியலில் அரசு அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பட்டியலில் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

  1. அரசுப் பொறியியல் கல்லூரி, புனே
  2. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (தமிழ்நாடு)
  3. எல்.டி பொறியியல் கல்லூரி
  4. தியாகராஜர் பொறியியல் கல்லூரி (தமிழ்நாடு)
  5. வீர்மாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப நிறுவனம், மகாராஷ்டிரம்
Atal தரவரிசையில் தனியார் பல்கலைக்கழகங்கள்

Atal தரவரிசையில் தனியார் பல்கலைக்கழகங்கள்

அடல் தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவிலிருந்து தனியார் மற்றும் சுயநிதி பல்கலைக் கழகங்களின் பட்டியல்.

  1. கலிங்கா தொழிற்சாலை தொழில்நுட்ப நிறுவனம், கோர்தா
  2. சண்டீகர் சித்காரா பல்கலை.
  3. ஜலந்தர் லவ்லி தொழில் பல்கலை.
  4. எஸ்.ஆர்.எம்.அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் (தமிழ்நாடு)
  5. பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலை., குஜராத்
  6. கலசலிங்கம் ஆராய்ச்சி, கல்வி அகாதெமி
  7. சண்டிகர் பல்கலை,
  8. விஐடி, வேலூர் (தமிழ்நாடு)
  9. அமிட்டி பல்கலை. நொய்டா
  10. புனே சிம்பயாஸிஸ்
தனியார் கல்லூரிகள் பட்டியல்

தனியார் கல்லூரிகள் பட்டியல்

மத்திய அரசின் சார்பில் புதிய கண்டுபிடிப்புகளில் தேசிய அளவில் தலைசிறந்து செயல்பட்டு வரும் தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளின் பட்டியல்

  1. ஜி.எச். ராய்சோனி பொறியியல் கல்லூரி, நாகபுரி
  2. ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி (தமிழ்நாடு)
  3. கேஐஇடி கல்வி நிறுவனங்கள் குழுமம்
  4. ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி (தமிழ்நாடு)
  5. என்ஐடிடிஇ மீனாட்சி தொழில்நுட்ப கல்லூரி.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ARIIA Atal Rankings 2021: IIT Madras retains top slot in Atal ranking for third year
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+