முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அறிவிப்பு ஜூலை 21-இல் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) நடத்திய அண்ணா பல்கலைக்கழகம், தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.
இதில், டான்செட் அல்லது ஏதேனும் ஓர் ஐஐடி சார்பில் அகில இந்திய அளவில் நடத்தப்படும் கேட்' (பட்டதாரி நுண்ணறி தேர்வு) மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு ஒதுக்கீட்டு எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது.
இந்தக் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வருகிற 21-ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது.
anna university counselling education exam university student chennai tamilnadu அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு கல்வி மாணவர்கள் சென்னை தமிழகம்
English summary
Anna University has announced pg engineering counselling Date
Story first published: Wednesday, July 17, 2019, 16:19 [IST]


Click it and Unblock the Notifications












