சென்னை; பைலட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது ஏர் இந்தியா நிறுவனம். மும்பை நாரிமன் பாயிண்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை ஒன்றிணைத்து
உருவாக்க இந்த ஏர் இந்தியா நிறுவனம் 2010-ல் தொடங்கப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மொத்தம் 92 சீனியர் டிரைய்னி பைலட் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்க விண்ணப்பிக்க கண்டிப்பாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 38 வயதுக்கு மிகாமலும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 40 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும். விருப்பமும்ள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் General Manager (Personnel), Air India Limited, Headquarters Airlines House, 113, Gurudwara Rakab Ganj Road, NewDelhi என்ற முகவரிக்கு ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications

