புது டெல்லி : ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) புது டெல்லி இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை படிப்பில் சேருவதற்கான (எம்பிபிஎஸ் 2017) நுழைவுத் தேர்வினை மே மாதம் 28ந் தேதி நடத்தியது. அதற்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
2 லட்சத்து 80 ஆயிரம் பேர் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வினை எழுதினார்கள். நுழைவுத் தேர்வு முடிவுகளை எழுதிய மாணவ மாணவியர்கள் www.aiimsexams.org என்ற இணையதள முகவரிக்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் உள்ள 7 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 28ந் தேதி நடைபெற்றது, அதற்கான முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 3ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்தாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதுக் குறித்து விசாரிக்க எய்ம்ஸ் நிர்வாகம் குழு ஒன்றை அமைத்துள்ளது.


Click it and Unblock the Notifications












