அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) சிறந்த கல்வி முறைகளைச் செயல்படுத்தி வரும் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பெஸ்ட் பிராக்டீசஸ் என்னும் விருதுடன் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் நான்கு கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 29 கல்லூரிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் தமிழகத்தில் கோவையைச் சேர்ந்த பி.எஸ்.ஜி, நாமக்கல்லைச் சேர்ந்த கேஎஸ்ஆர், சென்னை லயோலா மற்றும் திருவள்ளூர் ஆர்எம்கே ஆகிய நான்கு கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
For Daily Alerts