யோகாவுக்கான முதுகலை பட்டபடிப்பு சேர்க்கை !!

By Sobana

யோகா படிப்புக்கான முதுகலை பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்கமானது தனது அறிவிப்பில் யோகா படிப்புகளுக்கான முதுகலை பட்டம் பெற விண்ணப்பிக்க அறிவிப்பினை வெளியிட்டுள்ளது . சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மருத்துவ கல்லுரியில் யோக படிப்புகளுக்கு 15 இடங்கள் உள்ளன .

யோகா முதுகலைப்பட்ட படிப்புக்கான  சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவும்

 

யோகா படிப்புக்கான முதுகலை பட்டத்தை பெற மாணவர்கள் இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்கம் அறிவித்துள்ள இணையத்தளத்தில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் . நேரடி விண்ணப்பம் பெறும் முறை இல்லை . விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 3000 செலுத்த வேண்டும் . தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது .

நுழைவுதேர்வு :

யோகா படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய இறுதிநாள் செப்டம்பர் 28 ஆகும் . இப்படிப்புகளுக்கான நுழைவுதேர்வு அக்டோபர் 21 ஆம் நாள் நடைபெறும் . நுழைவுதேர்வு நடைபெறும் இடமானது அறிஞர் அண்ணா அரசு மருத்துவமணை வளாகம் அன்றே மாணவர்களுக்கான நுழைவுதேர்வு முடிவும் அறிவிக்கப்படும் . அதனை தொடர்ந்து கலந்தாய்வு நடத்தி மாணவர்களுக்கான இடங்கள் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் . யோகா படிப்புகளுக்கான நுழைவுதேர்வு அக்டோபர் 21 ஆம் நாள் காலை 9.30 மணிக்கு தொடங்கும் . அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுவதால் தேவையற்ற அலைச்சல்கள் தடுக்கப்படுகிறது . மாணவர்களுக்கான இடங்களின் விவரம் உறுதிசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

சார்ந்த படிப்புகள்:

சித்தா, யுனானி , யோகா, ஹோமியோ படிக்க போறிங்களா உங்களுக்கான நியூஸ் ,,!

வாழும் கலை மற்றும் வாழ்வின் எளிய மருத்துவம் யோகா

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about yoga master degree admissions
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X