விருப்பமுடன் பணியாற்ற அழைக்கிறது விமான நிலைய ஆணைய நிறுவனம்!!

சென்னை: இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் (AAI) பணியாற்ற ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஆணையத்தில் 86 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது இந்திய விமான நிலையங்களின் ஆணையம்.

காலியாகவுள்ள மொத்த பணியிடங்கள் மொத்தம் 86 ஆகும்.

விருப்பமுடன் பணியாற்ற அழைக்கிறது விமான நிலைய ஆணைய நிறுவனம்!!

இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணியிடங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் காலியாகவுள்ளள.

இதற்கான தேர்வுகளுக்கு மதுரை, ஹைதராபாத், கோழிக்கோடு, மைசூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 50 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பையர் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்பவர்களுக்கு 30.06.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

மாதம் ரூ.12,500 - 28,500 என்ற அடிப்படையில் சம்பளம் இருக்கும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணத்தை சென்னையில் மாற்றத்தக்க வகையில் Airports Authority of India என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
THE REGIONAL EXECUTIVE DIRECTOR,
Airports Authority of India,
Southern Region,
Chennai - 600027
என்ற முகவரிக்கு வரும் 31-ம் தேதிக்குள் சென்று சேருமாறு அனுப்பவேண்டும்.
இந்தப் பணியிடம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு http://www.aai.aero/employment_news/RECRUITMENT-JUNIOR-ASSISTANT-(FS)-SRD-2015_160615.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு அறியலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAI will ecruit 86 Junior Assistants soon through exams and interview. AAI has invited applications for the post from eligible persons. For more details aspirants can logon onto http://www.aai.aero/employment_news/RECRUITMENT-JUNIOR-ASSISTANT-%28FS%29-SRD-2015_160615.pdf.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X