பையன்னா இப்படி இருக்கணும்...! இது அமெரிக்க மேதை உருவான கதை!!

சென்னை: 17 வயது மேதைக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாஸாவில் வேலை கிடைத்துள்ளது. பையன்னா நமக்கு இப்படி ஒரு பையன் பொறக்கணும்னு இங்குள்ள பெற்றோர் வேண்டிக் கொள்கின்றனர்.

கலிபோர்னியா

கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான் கேப்ரியேல் நகரத்தைச் சேர்ந்தவர் மோஷே கே காவலின். 17 வயதான மோஷே இளவயது மேதை என புகழ்பெற்றவர். இந்த 17 வயதிலேயே இவர் 2 பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுள்ளார்.

விமானமும் ஓட்டுகிறார்

விமானமும் ஓட்டுகிறார்

மிகச் சிறிய வயதிலேயே கார் ஓட்டக் கற்றுக்கொண்டார். இப்போது விமானங்களையும் இயக்கி வருகிறார்.

நாஸாவில் வேலை

நாஸாவில் வேலை

தற்போது நாஸாவில் இவருக்கு வேலை கிடைத்துள்ளது. நாஸாவின் செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்வதுதான் இவரது வேலையாகும்.

 

 

இளவயது மேதை

இளவயது மேதை

இவர் சிறிய குழந்தையாக இருந்தபோது குழந்தைகளுக்கான செய்கைகளை இவர் செய்யவில்லை. சிறிய வயதிலேயே மிகவும் சூட்டிகையாக இருந்து பெற்றோரையும், உறவினர்களையும் ஆச்சர்யப்படுத்தினார்.

11 வயதில் டிகிரி

11 வயதில் டிகிரி

பள்ளிக்குப் போகுமுன்னரே பாடங்கள் அனைத்தையும் படித்து முடித்து ஆசிரியர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். 11 வயதில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெறறுவிட்டார். இதைத் தொடர்ந்து கணிதத்தில் இளநிலைப் பட்டத்தையும் அவர் பெற்றுவிட்டார்.

மாஸ்டர் டிகிரி

மாஸ்டர் டிகிரி

இதைத் தொடர்ந்து சைபர் பாதுகாப்பு தொடர்பான படிப்பில் மாஸ்டர் டிகிரியை ஆன்-லைன் மூலம் பெற்றுவிட்டார். இந்த பட்டத்தை பாஸ்டன் பகுதியிலுள்ள பிராண்டீஸ் பல்கலைக்கழகம் வழங்கியது.

ஆச்சர்யச் சிறுவன்

ஆச்சர்யச் சிறுவன்

பல்வேறு விதமான ஆச்சர்யம் தரும் விஷயங்களை இவர் செய்து வருகிறார். இவரது ஆர்வம், திறமையைப் பார்த்து நாஸா இவருக்கு தற்போது வேலையை வழங்கியுள்ளது. நாஸாவின் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

கண்காணிப்புத் தொழில்நுட்பம்

கண்காணிப்புத் தொழில்நுட்பம்

நாஸாவின் விமானங்கள், ஏவுகணைகளைக் கண்காணிப்பதற்கான தொழில்நுட்பம் இது.
சமீபத்தில் தனது 2-வது புத்தகத்தை வெளியிட்டு அதிசயப்பட வைத்துள்ளார் மோஷே.
தான் கண்டது, கேட்டது, படித்தது, அறிந்தது தொடர்பான அனுபவங்களை இந்தப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் மோஷே.

பைலட் லைசென்ஸ்

பைலட் லைசென்ஸ்

இந்த ஆண்டு முடிவில் இவரது பைலட் லைசென்ஸ் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் அருகிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

 

 

வீடு முழுவதும் கோப்பை

வீடு முழுவதும் கோப்பை

இவரது வீடு முழுவதும் இவர் வாங்கிய கோப்பைகள், பதக்கங்கள், ஷீல்டுகள், பரிசுகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இவரது தைவானைச் சேர்ந்தவர். தந்தை பிரேசிலைச் சேர்ந்தவர். 7 வயதிலேயே டிரிக்னாமெட்ரி கணிதத்தை அநாயாசமாகச் செய்வாராம் மோஷே என்று அவரது ஆசிரியர் தெரிவிக்கிறார்.

 

 

கணித மேதை

கணித மேதை

அவருக்கு கணிதம் கற்றுத் தந்த ஈஸ்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் கல்லூரி பேராசிரியர் டேனியல் ஜட்ஜ் கூறியதாவது: இவரது கணித ஆற்றல் சிறப்பாக இருக்கும். அவரது அறிவுத் திறமையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் அவ்வப்போது இதுபோன்ற மேதைகள் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார் அவர்.

 

 

18 வயதுக்குத் காத்திருப்பு

18 வயதுக்குத் காத்திருப்பு

கார் ஓட்டக் கற்றுக்கொண்டாலும் இவர் சாலைகளில் கார் ஓட்ட முடியாது. அமெரிக்காவில் 18 வயதான பின்னர் டிரைவிங் லைசென்ஸ் தருகிறார்கள். அதனால் தனது 18-வது பிறந்தநாளுக்காகக் காத்திருக்கிறார் மோஷே. இப்போது பிஎச்.டி. பட்டப்படிப்பை படித்து வருகிறார் மோஷே.

தோழி...

தோழி...

இந்த படிப்பை முடித்த பின்னர் தனது தோழியைத் தேடிக் கொள்வாராம் அவர். சிரிப்போடு சொல்கிறார் மோஷே.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Moshe Kai Cavalin life is filled with contrasts, this 17-year-old from San Gabriel, California, has two university degrees. He flies airplanes when he is young to drive a car alone. He works at NASA when his peers might be sharing the news of NASA on social networking sites. Cavalin has achieved what is impossible for kids of his age. He completed his graduation at the age of 11, has also holds bachelor's in math from the University of California, Los Angeles in another four years. This year, he started online classes to get a master's in cyber security through the Boston area's Brandeis University. He decided to postpone that pursuit for a couple of terms, though, while he helps NASA develop surveillance technology for airplanes and drones.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X