சென்னை : தமிழகம் முழுவதும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியது. தொடர்ச்சியாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த 12ம் வகுப்புத் தேர்வு மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் எந்த வித ஒழுங்கீனச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுபவர்கள் கண்டுப் பிடிக்கப்பட்டால் வன்மையாகத் தண்டிக்கபடுவார்கள் எனவும் கூறியுள்ளது. ஆனாலும் மாணவர்கள் தொடர்ந்து காப்பியடித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நேற்று (27.03.2017) திங்கட் கிழமை கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல் போன்ற தேர்வுக்ள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்தது.

பறக்கும் படை
கணிதப் பாடத்தில் காப்பி அடித்ததாக, சென்னையில் 4 பேர், கடலூரில் 22 பேர் என மொத்தம் 33 பேர் சிக்கினர். விலங்கியல் பாடத்தில் கடலூரில் மட்டும் 7 பேர் சிக்கினர்.காப்பி அடித்து எழுதிய மாணவர்கள் மாட்டிக் கொண்டனர். அவர்கள் பறக்கும் படையினர் நடத்திய சோதையின் போது கண்டுப்பிடிக்கப்பட்னர்.

40 மாணவர்கள்
பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் கணிதம், விலங்கியல் பாடங்களில் காப்பியடித்த 40 மாணவர்களை பறக்கும் படையினர் பிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட மாணவ மாணவிர்கள் தேர்வுக் கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பிளஸ் 2 தேர்வு
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற கணிதம், விலங்கியல் பாடங்களுக்கான தேர்வில் காப்பி அடித்த 40 பேரை பறக்கும் படையினர் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் அதிக அளவில் காப்பியடித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணிதம், விலங்கியல் பாடங்களில் காப்பி அடித்ததற்காக கடலூர் மாவட்டத்தில் அதிகப்பட்சம் 29 பேரை பறக்கும் படையினர் பிடித்தனர்.

தேர்வு முடிந்தது
மார்ச் 1ம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறிப்பிட்ட சிலருக்கு நேற்று முடிந்துவிட்டது. கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவினை எடுத்து பயின்ற மாணவ மாணவர்களுக்கு நேற்றுடன் 12ம் வகுப்புத் தேர்வு முடிந்து விட்டது. தேர்வு முடிந்த மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பொதுத் தேர்வு
உயிரியல் மற்றும் வரலாறு மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உயிரியல் மற்றும் வரலாறு பாடம் எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு 31.03.2017ம் தேதி தேர்வுகள் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.