+2 தேர்வு.. இயற்பியல், பொருளியல் தேர்வில் காப்பி அடித்து சிக்கிய 31 மாணவர்கள்!

பிளஸ்டூ தேர்வில் 31மாணவர்கள் இயற்பியல் தேர்வில் காப்பி அடித்ததற்காக பிடிபட்டனர்.

சென்னை : தமிழகம் முழுவதும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியது. தொடர்ச்சியாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த 12ம் வகுப்புத் தேர்வு மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் எந்த வித ஒழுங்கீனச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுபவர்கள் கண்டுப் பிடிக்கப்பட்டால் வன்மையாகத் தண்டிக்கபடுவார்கள் எனவும் கூறியுள்ளது. ஆனாலும் மாணவர்கள் தொடர்ந்து காப்பியடித்து வருகின்றனர்.

+2 தேர்வு.. இயற்பியல், பொருளியல் தேர்வில் காப்பி அடித்து சிக்கிய 31 மாணவர்கள்!

இதனையடுத்து நேற்று 21.03.2017 அன்று இயற்பியல், பொருளியல் போன்ற தேர்வுக்ள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்தது. நேற்று நடந்த இயற்பியல் தேர்வில் 15 மாணவர்களும், பொருளியல் தேர்வில் 16 மாணவர்களும் காப்பி அடித்து எழுதியுள்ளனர். காப்பி அடித்து எழுதிய மாணவர்கள் மாட்டிக் கொண்டனர். அவர்கள் தேர்வு மைய மேற்பார்வையாளரால் கண்டுப்பிடிக்கப்பட்னர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 5 தனித்தேர்வர்களும், அரியலூர், தஞ்சாவூர், சேலம், ஈரோடு ஆகிய 4 மாவட்டத்தைச் சார்ந்த தலா ஒரு தனித்தேர்வரும் பிடிபட்டனர். திருச்சி மாவட்டத்தில் 9 மாணவர்கள் காப்பி அடித்ததற்காக பிடிபட்டனர். கடலூர் மாவட்டத்தில் 6 மாணவர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 மாணவர்களும், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் பிடிபட்டனர்.

31 மாணவர்கள் இயற்பியல் மற்றும் பொருளியல் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Director of Government examinations Tan. Vasunthara Devi has said that 31 physics students were caught copying in the +2 exams and sent out from the exam hall.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+