'மகாரத்னா' அந்தஸ்து பெற்ற நிறுவனமான 'செயில்' என அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையத்தில், பாராமெடிக்கல், ஐசியூ டெக்னீசியன் மற்றும் செவிலியர்கள் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 41 பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
நிர்வாகம்: இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of india limited)
மேலாண்மை: மத்திய அரசு

பணி விவரம்
v Operation Theatre Technician
v Dresser (Female)
v X-ray Technician
v Pharmacist
v Laboratory Technician & Blood Bank Technician
v Pulmonary Function Test Technician
v Dental Hygienist
v Dental Assistant/Dental operating room assistant
v CCU Technician
v Nurses
பணியிடங்கள் எண்ணிக்கை: 43
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
நேர்காணல் தேதி: அக்டோபர் 27,28,30,31 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
பணியிடம் : பர்னபூர் , மேற்கு வங்கம்.
பயிற்சி காலத்தில், மத்திய அரசு விதிகள்படி உதவித்தொகை வழங்கப்படும்.
கல்வி தகுதி
மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்வி நிறுவனத்தில் விண்ணப்பதாரர் பதவிக்கு உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அக்.,1 ஆம் தேதியன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மற்ற பிரிவினருக்கு, அரசால் வழங்கப்பட்ட வயது வரம்பு தளர்வுகள் கிடைக்கப்பெறும். வயது வரம்பு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பாணை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
முக்கிய தகவலுங்கோ...!
தேர்வின்றி, கல்வி தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பிழையின்றி பூர்த்தி செய்து, மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
தகுதியான நபர்களுக்கு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அப்போது உரிய ஆவணங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் எடுத்து போக வேண்டும் என்பதை மறக்காதீங்க... மறக்காதீங்க...!
நோட் இட் ப்ளீஸ்...!
https://www.sail.co.in/en/home என்ற இணையதளங்களில் பணி குறித்த விரிவான அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
வயது வரம்பு, கல்வி தகுதி, ஊதியம் உள்ளிட்ட இதர விவரங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் இணையதளத்தின் வாயிலாக முழு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
நேர்காணல் நடக்கும் இடம்/தேதி/நேரம்
தேதி : 27th & 28th of October 2023 (for Paramedics and CCU technicians) 30th & 31st of October 2023 (for Nurses).
இடம் : Confluence, Opp. To Burnpur Post Office, Near Bharti Bhawan, Burnpur-713325, Dist : Paschim Bardhaman , West Bengal.
நேரம்: 09.00 AM to 11.00 AM
கூடுதல் விவரங்கள் அறிய வேண்டும்?


Click it and Unblock the Notifications












