எழுதப்படிக்கத் தெரிந்தால் ரூ.50 ஆயிரம் ஊதியம்- தமிழக அரசு

வேலூர் மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 15 இரவு காவலர், முழு நேர பணியாளர் (மசால்ஜி) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 15 இரவு காவலர், முழு நேர பணியாளர் (மசால்ஜி) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எழுதப்படிக்கத் தெரிந்தால் ரூ.50 ஆயிரம் ஊதியம்- தமிழக அரசு

நிர்வாகம் : வேலூர் மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலியிடங்கள்: 15

பணி : இரவு காவலர் - 12
பணி : முழு நேர பணியாளர் (மசால்ஜி) - 03

கல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்ப வேண்டும்.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பட்டியல் தகுதித் தேர்வுக்கு இந்நீதிமன்ற https://tamil.careerindia.com/vellore மற்றும் https://tamil.careerindia.com/tn/vellore என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவோர் மட்டும் தகுதித் தேர்வில் கலந்துகொள்ளலாம். பின்னர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : தலைமை நீதித்துறை நடுவர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வேலூர் - 632 009

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 16.05.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment Notification 2019 Criminal Unit - Vellore_1.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Vellore District Court Recruitment 2019: 15 Vacancies for Night Watchman and Masalchi Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X