மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர், இணை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சிஏ, எம்பிஏ, சட்டம் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி இயக்குநர், இணை உதவி இயக்குநர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 04
கல்வித் தகுதி :
உதவி இயக்குநர் (Forensic Audit) - Chartered Accountant/ Cost and Management Accountant/ Company Secretary/ Chartered Financial Analyst/ Post Graduate Diploma in Management (Finance)/ Master's in Business Administration (Finance)/ Master's of Business Economics/ Master's in Commerce/ Bachelor's in Law போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இணை உதவி இயக்குநர் (Police Science) - Bachelor's Degree in Law தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.upsc.gov.in என்ற இணையதளம் மூலம் 04.03.2021 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பிறகு அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 05.03.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.25
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி / பெண்கள்) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.