மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள 370 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஜூலை 6ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : National Defence Academy
மேலாண்மை : மத்திய அரசு
தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)
தேர்வு : NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION (II),
மொத்த காலிப்பணியிடங்கள் : 370
கல்வித் தகுதி : தேசிய பாதுகாப்பு அகாடமியின் இராணுவ அதிகாரி பணியிடத்திற்கு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 2002 ஜனவரி 2ம் தேதிக்குப் பிறகு 2005 ஜனவரி 1ம் தேதிக்கு முன் பிறந்தவராக இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மத்திய அரசின் National Defence Academy பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.upsc.gov.in/ என்னும் இணையதளம் மூலம் 06.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : UPSC சார்பில் இதற்கான பணியாட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைனில் மூலமான செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.