மத்திய அரசின் வனத் துறையில் காலியாக உள்ள 90 வன அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் மார்ச் 3ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வனத் துறை
மேலாண்மை : மத்திய அரசு
தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)
தேர்வு : Indian Forest Service Examination
பணி : வன அதிகாரி
மொத்த காலிப்பணியிடங்கள் : 90
கல்வித் தகுதி : வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், வேதியியல் பொறியியல், வனவியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.08.2020 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : யுபிஎஸ்சி சார்பில் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழகத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் : கோயம்புத்தூர், சென்னை, மதுரை, திருச்சி
விண்ணப்பிக்கும் முறை : மத்திய அரசின் வன அதிகாரி பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.upsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைனில் மூலமான செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
UPSC Indian Forest Service Examination முக்கிய நாட்கள்:
- முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 31.05.2020
- முதன்மைத் தேர்வு 2020 நவம்பர் மாதம் நடைபெறும். இதுகுறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகும்.
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.03.2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.upsc.gov.in/sites/default/files/Notification-IFoSE_2020_N_Engl.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












