பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் - மத்திய அரசில் அசத்தல் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 581 பொறியாளர் தொடர்பான பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் - மத்திய அரசில் அசத்தல் வேலை வாய்ப்பு!

 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வேத் துறை, மத்திய பொறியியல் சேவைப் பிரிவு, மக்கள் கணக்கெடுப்புத் துறை, இராணுவ தளவாட தொழிற்சாலை, எல்லையோர சாலைப் பொறியியல் பிரிவு, தொலைத் தொடர்பு துறை என பல்வேறு துறைகளில் இக்காலிப் பணியிடங்கள் உள்ளன.

காலிப் பணியிடம் : 581

தேர்வு : யூபிஎஸ்சி - Engineering Service Exam - 2019

வயது வரம்பு : 01.01.2019ம் தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப் படி தளர்வு உண்டு

கல்வித் தகுதி :

  • பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட ஏதேனும் ஓர் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பயின்றிருக்க வேண்டும்.
  • Radio Physics, Radio Engineering, Electronics & Telecommunication, Wireless Communication Electronics போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு முறை : முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு மூலம் தகுதியுடையோர் தேர்வு செய்ப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம் : சென்னை மற்றும் மதுரை

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200

  • (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.)

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

இணையதள முகவரி : www.upsconline.nic.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 22

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.upsc.gov.in/sites/default/files/Notification-ESE-2019-Engl_correctlinks.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    UPSC ESE 2019: UPSC Engineering Service Exam notification released, apply for 581 posts
    --Or--
    Select a Field of Study
    Select a Course
    Select UPSC Exam
    Select IBPS Exam
    Select Entrance Exam

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more