சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள புராஜக்ட் பெல்லோ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை இந்தப் பணியிடங்களுக்கு வரும் 15.04.2024 -ம் தேதி வரை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
இருப்பினும் இப்பல்கலைக்கழகம், மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டதாக உள்ளது.
மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இங்கு இருந்தன. நீண்ட காலமாக தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன. மேலும்,
தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாகத் தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் புராஜக்ட் பெல்லோ (Project Fellow) பணியிடத்துக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
புராஜக்ட் பெல்லோ (Project Fellow) பணியிடத்துக்கான கல்வித்தகுதி:
இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Biochemistry, Life Science பாடப்பிரிவில் Master Degree (M.Sc) முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புராஜக்ட் பெல்லோ (Project Fellow) பணியிடத்துக்கான வயதுத்தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
புராஜக்ட் பெல்லோ (Project Fellow) பணியிடத்துக்கான சம்பள விவரம்:
இந்த சென்னைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.18,000/- மாத ஊதியமாக பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை: புராஜக்ட் பெல்லோ (Project Fellow) பணியிடத்துக்கு பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் வழிமுறை: புராஜக்ட் பெல்லோ (Project Fellow) பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.04.2024-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


Click it and Unblock the Notifications












