இந்தியாவில் சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பித் தரலாம். மேலும் கூடுதல் விவரங்களைப் பெற unionbankofindia.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்தச் சிறப்புவாய்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வங்கியில் தற்போது மேனேஜர் 447, அசிஸ்டென்ட் மேனேஜர் 108, சீனியர் மேனேஜர் 42, தலைமை மேனேஜர் (ஐ.டி.,) 5, மேனேஜர் - ஐ.டி., 4, என மொத்தம் 606 இடங்கள் உள்ளன.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
இந்த வங்கியில் பெரும்பாலான பதவிகளுக்கு பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு டிகிரி பட்டம் தேவைப்படும். மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்களுக்கான வயது விவரம்:
1.2.2024 அடிப்படையில் 30 - 45, 28 - 38, 25 - 35, 20 - 30 என பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை:
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்களுக்காக எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்யவேண்டும்
விண்ணப்பக்கட்டணம்:
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்களுக்கு ரூ. 850 விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் ரூ.175 செலுத்தினால் போதுமானது.
கடைசிநாள்:
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப 23.2.2024-ம் தேதி கடைசி நாளாகும்.
இணையதள முகவரி:
மேலும் கூடுதல் விவரங்களைப் பெற unionbankofindia.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












