யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் (United India Insurance Company Limited-UIIC) தற்போது அசிஸ்டெண்ட் (Assistant) பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://uiic.co.in/recruitment/details/15257 என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்த பெருமைவாய்ந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் தான் (United India Insurance Company Limited-UIIC) தற்போது அசிஸ்டெண்ட் (Assistant) பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசிஸ்டெண்ட் (Assistant) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி விவரம்:
இந்த அசிஸ்டெண்ட் (Assistant) பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு (Graduate Degree) தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
அசிஸ்டெண்ட் (Assistant) பணியிடங்களுக்கான வயது விவரம்:
30.09.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
அசிஸ்டெண்ட் (Assistant) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் மாதந்தோறும் ரூ.37,000/- சம்பளமாக பெறுவர்.
தேர்வு முறை:
இந்த அசிஸ்டெண்ட் (Assistant) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் டெஸ்ட் மற்றும் ரீஜனல் லேங்குவேஜ் டெஸ்ட் (Online Test மற்றும் Regional Language Test) ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWBD / UIIC ஊழியர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.250/ செலுத்தவேண்டும். மற்ற நபர்கள் - ரூ.1000/- செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த UIIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 16.12.2023 அன்று முதல் 06.01.2024 அன்று வரை https://uiic.co.in/recruitment/details/15257 என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://uiic.co.in/recruitment/details/15257 என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
விளம்பர டவுன்லோடு:
இந்தப் பணியிடம் தொடர்பான விளம்பரத்தை டவுன்லோடு செய்து காண https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/ASSISTANT_RECRUITMENT_2023.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












