8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை!

திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை!

 

நிர்வாகம் : திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : ஓட்டுநர்

வயது வரம்பு : 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

(அரசு விதிமுறைகளின்படி, குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)

கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி : இலகு ரகம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனமாக இருந்தால் குறைந்தது 6 ஆண்டுகள் அனுபவம் தேவை.

பணியிடம் : திருச்சி

ஊதியம் : ரூ.10,000

விண்ணப்பிக்கும் முறை : இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், கல்விச்சான்றிதழ் நகல்கள், போட்டோ ஆகியவற்றை இணைத்து பதிவஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மண்டலப்பயிற்சி இணை இயக்குநர்,

மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் (முதல்தளம்),

அரசு பல்துறை கட்டிட வளாகம், காஜாமலை,

திருச்சி-20

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2019 அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Trichy Employment Office Recruitment 2019: Apply For 01 driver Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X