இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதுடெல்லியில் காலியாக உள்ள ஆலோசகர் (Advisor -Legal) பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கூடுதல் விவரங்களுக்கு https://vacancies.trai.gov.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்ற டிராய் (Telecom Regulatory Authority of India (TRAI), இந்தியாவில் செயல்படும் அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாக உள்ளது.
இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997-ன் படி, இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகளையும், கட்டணங்களையும் ஒழுங்குபடுத்த, பிப்ரவரி 20, 1997-ஆம் ஆண்டில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது..

தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் ஒரு தலைவரும், இரண்டு முழு நேர உறுப்பினர்களும், இரண்டு பகுதி நேர உறுப்பினர்களும் கொண்டுள்ளது. ஆணைய முடிவுகளைச் செயல்படுத்த ஒரு முழு நேர செயலர் தலைமையில் செயலகம் செயல்படுகிறது.
இந்த பெருமைமிகு டிராய் நிறுவனத்தில்தான் தற்போது ஆலோசகர் (Advisor -Legal) காலியாக உள்ளன.
ஆலோசகர் பணியிடத்துக்கான கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டமேற்படிப்பு, சட்டப்படிப்பு (Master/Bachelor Degree in Law) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆலோசகர் பணியிடத்துக்கான சம்பள விவரம்:
இந்த ஆலோசகர் பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.144200 - 218200/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 19/01/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் தொடர்பான விவரங்களை
https://www.trai.gov.in/sites/default/files/Vacancy_11122023.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறியலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://vacancies.trai.gov.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












