வேலைக்காகுமா உங்கள் ரெஸ்யூம்? இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி!

நம் பெரும்பாலும் செய்யும் முதல் தவறே வேலைக்கு விண்ணப்பிக்க அடுத்தவர்களின் ரெஸ்யூமை காப்பி பேஸ்ட் செய்வது தான்.ஒரு ஸ்மார்ட் ரெஸ்யூமை தயார் செய்வது எப்படி?

By Kani

நம் பெரும்பாலும் செய்யும் முதல் தவறே வேலைக்கு விண்ணப்பிக்க அடுத்தவர்களின் ரெஸ்யூமை காப்பி பேஸ்ட் செய்வது தான். என்ன செய்வது என் அவசரம் உங்களுக்கு தெரியுமா என கேட்கிறீர்களா? அவசரத்திற்கு ஒரு ரெஸ்யூமை காப்பி செய்வது தவறில்லை.

குறைந்தபட்சம் அதை நாம் விண்ணப்பிக்கும் துறைக்கு ஏற்றார் போல் மாற்ற வேண்டியது மிக அவசியம். இல்லை என்றால் ஏதோ "வேண்டா வெறுப்புக்கு பிள்ளை பெற்று காண்டமிருகம்" என்று பெயர் வைத்த கதையாகிவிடும்.

வேலைக்காகுமா உங்கள் ரெஸ்யூம்? இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி!

வேலைக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தை கரெக்ட் செய்யும் ஒரு ஸ்மார்ட் மார்கெட்டிங் யுக்திதான் ரெஸ்யூம். அந்த ரெஸ்யூமை எப்படி தயார் செய்வது இங்கே பார்க்கலாம்.

1. மிக சாதரண விஷயங்களை தவிற்பது நலம்:

ரெஸ்யூமில் எம்எஸ் அவுட்லுக், இமெயில், இன்டெர்நெட் பொன்ற விஷயங்களை கையாளத்தெரியும் என்பதை குறிப்பிடுவதை தவிற்கலாம். இது போன்ற விஷயங்கள் வேலைக்கு தேர்ந்தேடுப்போரை கடுப்பேற்றும் படி அமைய வாய்ப்புள்ளது.

2. முகவரி:

முகப்பில் செல்போன்,லேண்ட்லைன் என்று எழுதுவதிற்கு பதில் இ-மெயில் முகவரியை மட்டும் குறிப்பிடுவது சிறப்பு. வெறும் இமெயில் மட்டும் குறிப்பிடுவதிற்கு பதில் நமது முகவரியுடன் குறிப்பிடுவது மிகச்சிறப்பு.

3. அனுபவம்:

நீண்ட அனுபவம் கொண்டவர்கள் ரெஸ்யூமில் 10-15 வருட அனுபவத்தின் வரலாறுகளை எல்லாம் எழுதி ரெஸ்யூமை புத்தகமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். எவ்வளவு தெளிவாக குறிப்பிட முடியுமோ, அவ்வளவு எளிமையாக, அளவாக குறிப்பிடுவது நலம்.

4. வார்த்தைகள்:

நான் 'கடமை உணர்சி கொண்டவன்', 'பொறுப்பு மிக்க நபர்', 'ஆக்கபூர்வமான நபர்', 'கடின உழைப்பாளி' போன்ற வாரத்தைகளை எல்லா வேலைகளுக்கும் பயன்படுத்துவதை தவிற்பது நலம் பயக்கும்.

5. ரெஸ்யூமில் இதை எழுதுங்கள்:

நீங்கள் என்ன வேலைக்கு விண்ணப்பிக்க போகிறீர்கள் அங்கு மூளைக்கு வேலையா, உடலுக்கு வேலையா என்று கணித்து அதற்கு ஏற்றார் போல் உங்கள் ரெஸ்யூமை மெருகேற்றுங்கள்.

6. வேலையை விட்ட காரணம்:

பழைய நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு வந்த விவகாரமான காரணத்தை ரெஸ்யூமில் அப்படியே எழுதி விட வேண்டாம். எந்த நிறுவனமும், இது போன்ற காரணங்களை விரும்புவதில்லை. ஸே நீங்க இப்படி எழுதலாம்... பழைய நிறுவனத்தில் திறமைகளை சரியாக பயன்படுத்த வாய்ப்பு இல்லை போன்ற வித்தியாசமான காரணங்களை குறிப்பிடலாம்.

7. எழுத்து அளவு:

பாண்ட் சைஸ் 12, 14 மற்றும் டைம்ஸ் நியூ ரோமனில் இருப்பது நலம். பொதுவாக ரெஸ்யூம் முழுவதும் ஒரே வகையான பாண்ட் உபயோகப்படுத்துவது சிறப்பு. படிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படி இருந்தால் மட்டும் போதுமானது.

8. இ-மெயில் முகவரி:

நாம் கல்லூரியில் படிக்கும் காலங்களில் சில குறும்புத்தனமான இ-மெயில் முகவரியை உருவாக்கி வைத்திருப்போம். இதை ரெஸ்யூமில் கொடுத்தால் நம் நேரத்திற்கு அதை கண்டுகொள்ளவில்லை என்றால் பயம் இல்லை ஒரு வேலை கேள்வியே இதில் இருந்தே கூட ஆரம்பமாகலாம்.

இ-மெயில் உங்கள் முழுப்பெயருடனோ, அல்லது படிப்பை சுட்டிக்காட்டுவது போல் கொடுப்பது சிறப்பு.

9. சாதனை:

ரெஸ்யூமில் பழைய கல்லூரி முன்னாள் நிறுவனத்தில் நிகழ்த்திய சாதனைகளை அடுக்குவதிற்கு பதிலாக, நம் அனுபவம் தற்போதைய கம்பெனிக்கு எப்படி உதவப் போகிறது என்பதை குறிப்பிடுவது சற்று பயனுள்ளதாக அமையும்.

10. பிரிண்ட் அவுட்:

ரெஸ்யூமை டைப் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பாருங்கள். தவறு இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள். அவசரமாக பிரிண்ட் அவுட் எடுத்து முதல் கேள்வியே பிழைக்கான விடையை விளக்கும்படி இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Top 10 Tips for Writing a Great Resume
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+