உதவி தொகையுடன் ஆராய்ச்சிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி...!

TN Archives and historical Research fellowship 2023

வரலாறு, தமிழ், சமூக அறிவியல் தொடர்புடைய துறைகளில், உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள முதுகலை பட்டப்படிப்பை முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி

மேலாண்மை : மாநில அரசு

ஓராண்டு ஆராய்ச்சிக்கு வாய்ப்பு...!

பணி விவரம்

ஆராய்ச்சி உதவியாளர் (Research Fellowship)

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன்.30,2023

உதவி தொகை: மாதம் ரூ.10,000

கல்வி / இதர தகுதிகள்

முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆராய்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம். வரலாறு, சமூக அறிவியல், தமிழ் அல்லது அதற்கு நிகரான துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் ஓராண்டு கால ஆராய்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உதவி தொகை

ஆராய்ச்சிக்கு தேர்வாகும் நபர்களுக்கு, மாதம் ரூ.10,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

நிபந்தனைகள்:

இந்திய வரலாறு, தமிழ், சமூக அறிவியல், பெண்களின் வரலாறு, தேசிய இயக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு, புவியியல் வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தேர்வு செய்யப்படும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவண காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆய்வு செய்து, சமூகத்துக்கு பலனளிக்கும் வகையில் தங்கள் ஆராய்ச்சியை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் சமூக வரலாறு குறித்து பதிவு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த ஆராய்ச்சி பணியானது முழு நேர பணியாகும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்களை https://www.tnarchives.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலகத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு பின் பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஆராய்ச்சியில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய சலுகைகள், விடுமுறை உள்ளிட்ட இதர விபரங்களை அறிந்து கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.tnarchives.tn.gov.in/pdf/research_fellowship_appl.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Archives and Historical Research fellowship 2023: Eligible persons who are interested in doing one year research in Tamil Nadu Archives and Historical Research in History, Tamil, Social Sciences related fields with grant, June 30 is the last date to apply. is CHENNAI YOUTHS YOU CAN GIVE APPLICATIONS DIRECTLY INSTANTLY.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+