'போலீஸ்' என்றால் பயம் கலந்த மரியாதை, அனைவரிடத்திலும் இருக்கும். மரியாதையும், அவமரியாதையும் கிடைக்கும் ஒரே துறை எது என்றால், அது 'காவல்துறை' தான். இருந்தாலும், அந்த துறையில் சேருவதே கனவாக கொண்டிருக்கும் இளைஞர் பட்டாளத்துக்கு, ஒரு மகிழ்ச்சிக்கரமான செய்தியை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அதுகுறித்த அறிவிப்பை, கீழே பார்ப்போம்?
தமிழத்தில் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஜூன்.1 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(Tnusrb)
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
· காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா)
· காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை)
· காவல் சார்பு ஆய்வாளர்கள் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
நோட் பண்ணி வச்சுக்கோங்க ப்ளீஸ்...!
அறிவிப்பு வெளியான நாள் - 05.05.2023
இணைய வழி விண்ணப்பம் துவங்கும் தேதி - 01.06.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2022
எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும். இருப்பினும், தேர்வுக்கான சரியான தேதி, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.
பணியிடங்கள் எண்ணிக்கை: 621
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக்குழு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்வி நிறுவனங்களில் இருந்து 10+2+3/4/5 என்ற முறையில் பெற்ற இளங்கலை பட்டம் அல்லது 10+3+2/3 என்ற முறையில் பட்டயப்படிப்பு படித்த பின்னர் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் நேரடியாக இளங்கலை பட்டம் பெற்றவர்கள், மேற்கண்ட முறையில் இளங்கலை பட்டம் பெறாமல் இருந்தால், அவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
மொத்தம் உள்ள காலிப்பணியிடங்களில், 20 சதவீத இடங்கள், தமிழ் மொழி வழிக்கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 நாளன்று, 20 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பிற்கான தளர்வுகள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.
விண்ணப்ப கட்டணம்
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். காவல்துறை விண்ணப்பதாரர்கள், பொதுப்பிரிவு மற்றும் துறைக்கான ஒதுக்கீடு இரண்டிலும் பங்கு பெற விரும்புபவர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள் ஆகிய நடைமுறைகளில், தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஹோம்பேஜ்- https://cr2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action - என்பதை க்ளிக் செய்யவும்.
இதில் சுய விவரங்களை பூர்த்தி செய்து முதலில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
அதன் பின்பு, விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
முழு விவரங்களை பூர்த்தி செய்தவுடன் உங்கள் விண்ணப்பத்தை 'பிரிண்ட் அவுட்' எடுத்தும் வைத்து கொள்ளலாம்.
ஏனைய இதர வழிகளில் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இப்பணிகளுக்கு, 30.06.2023ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். மறக்காதீங்க...!
தமிழ் படிச்சிருந்தா 20 சதவீதம்
மொத்த காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்கள், முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று கொண்டு படித்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும்.
வாய்ப்பை தவற விடக்கூடாதுனா...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!
TNUSRB Notification - 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா?
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.tnusrb.tn.gov.in/pdfs/Notification_en.pdf
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.tnusrb.tn.gov.in/pdfs/Notification_ta.pdf


Click it and Unblock the Notifications












