சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள உதவி புரோகிராமர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.13 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குக் கணினி சார்ந்த துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு தகவல் ஆணையம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவி புரோகிராமர்
கல்வித் தகுதி : பி.எஸ்.சி அறிவியல், புள்ளிவிவரம், பொருளாதாரம், வர்த்தகம் அல்லது டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம் : சென்னை
ஊதியம் : ரூ.35,900 முதல் ரூ.1,13,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட தமிழ்நாடு தகவல் ஆணைய பணிக்குச் சேர விரும்புவோர் http://www.tnsic.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnsic.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.