TNRD Mayiladuthurai OA Recruitment 2023: மயிலாடுதுறை கைய்ஸ்... உங்கள் ஊரில் ரூ.50 ஆயிரத்தில் அரசு வேலை..!

மயிலாடுதுறை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு, 12.05.2023 வரை தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். நேரடி நியமனம் வாயிலாக நியமிக்கப்பட உள்ளனர்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை 2023

நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை(Rural Development and Panchayat Raj Department)

மேலாண்மை : மாநில அரசு

காலிப்பணியிடம் மாவட்டம்: மயிலாடுதுறை

என்னது ஓ.ஏ., வேலைக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம்?

பணி விவரம்

Ø அலுவலக உதவியாளர்

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.05.2023

வயது வரம்பு

பணிக்கு விண்ணப்பிக்க 01.01.2023 படி, பொது பிரிவினர் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடி, பட்டியல் இன பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு, அரசு விதிகள்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வி தகுதி

அலுவலக உதவியாளர் பணிக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மதிவண்டி(சைக்கிள்) ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்

அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக, ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை/ நிபந்தனைகள்

Ø விண்ணாப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

Ø இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Ø விண்ணப்பதாரர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

Ø அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

Ø சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

Ø தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) அனுப்பி வைக்கப்படும்.

Ø நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க, பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

Ø விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்களில் தவறு இருப்பது பரீசீலனையில் கண்டறியப்பட்டால், அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.

Ø நியமனத்தை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு உண்டு.

Ø காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்ப படிவம், https://mayiladuthurai.nic.in/notice_category/recruitment/ என்ற மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Ø பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12.04.2023 முதல் 12.05.2023 மாலை 5.45 மணி வரை அனுப்பலாம். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாக அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு),

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம்,

மயிலாடுதுறை - 609001.

கிளிக் ப்ளீஸ் ஆல் டீடைல் யூ வில் கெட்...!

https://mayiladuthurai.nic.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/04/2023041233.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mayiladuthurai district Office Assistant job 2023: In Mayiladuthurai district, rural development and panchayat unit vacant office assistant posts, eligible persons will be appointed on direct appointment basis. Applicants must be a resident of the notified district.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+