தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (TNPSC) அரசுத் துறையில் காலியாக உள்ள வேதியியலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.20 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு
நிர்வாகம் : Tamil Nadu Industries Subordinate Service
தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பணி : வேதியியலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 03
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் வேதியியல் அல்லது வேதியியல் தொழில்நுட்பத் துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், Pure or Applied Chemistry or Analytical Chemistry ஆகிய பாடங்களில் ஆராய்ச்சி பணிக்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 01.07.2021 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.37,700 முதல் அதிகபட்சம் ரூ.1,19,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையதளத்தின் மூலம் 23.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பதிவுக் கட்டணம் - ரூ.150
- தேர்வுக் கட்டணம் - ரூ.200
தேர்வு முறை :
TNPSC வெளியிட்டுள்ள இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய நாட்கள் :
- அறிவிப்பு வெளியான நாள் - 24.12.2021
- விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 23.01.2022
- தேர்வு நடைபெறும் தேதி - 19.03.2022
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












