சுற்றுலா, பயணத்தில் ஆர்வ மிக்கவரா நீங்கள்? தமிழக அரசில் வேலை

சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக தமிழக அரசின் சுற்றுலா துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 42 உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியிடங்களை முதல்முறையாகத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சுற்றுலா, பயணத்தில் ஆர்வ மிக்கவரா நீங்கள்? தமிழக அரசில் வேலை

நிர்வாகம் : சுற்றுலாத் துறை

தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)

பணி : உதவி சுற்றுலா அதிகாரி

மொத்த காலிப் பணியிடங்கள் : 42

கல்வித் தகுதி :

டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள் அல்லது ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

கூடுதலாகத் தமிழக அரசின் கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate course in Computer on Office Automation) அல்லது அதற்கு இணையாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.07.2019 ஆம் தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் கட்டுப்பாடு கிடையாது.

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக 100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் சுற்றுலா, பயணம் தொடர்பான பாடத்திலிருந்து 300 மதிப்பெண்ணுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் கொள் குறி வகையில் இடம்பெற்றிருக்கும்.

நேரடியாக உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியில் சேருவோர் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1), சுற்றுலா அலுவலர், உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.08.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 29.09.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_22_NOTYFN_ATO_GRADE-II.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2019 - 42 Assistant Tourist Officer, Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+