சிறைத்துறை நிர்வாக பிரிவில் ஆரம்ப நிலை பதவியான உதவி சிறை அதிகாரி (அசிஸ்டென்ட் ஜெயிலர்) பணியிடங்கள் (நேரடி நியமனம்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட உள்ளது. ஆண், பெண் என இருபாலரிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அமைப்பு : தமிழ்நாடு பொது சேவை ஆணையம்
மேலாண்மை : தமிழக அரசு வேலை
பணி : அசிஸ்டென்ட் ஜெயிலர்
பணியிடம் : தமிழ்நாடு
மொத்த காலிப் பணியிடம் : 30
ஆண் : 16
பெண் : 14
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்.
வயதுவரம்பு : 18 முதல் 30 வயது வரை
(எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.)
ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்ப முகவரி : www.tnpsc.gov.in
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 08.10.2018 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 07.11.2018 வரை
விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 09.11.2018
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
தேர்வு தேதி : 06.01.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ளவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும். அல்லது இப்பணி குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_24_nofyn_assistant_Jailor%20pdf.pdf என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யலாம்.
விண்ணப்பிக்கும் முறை:-
வழி 1:
டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (www.tnpsc.gov.in) செல்ல வேண்டும்.
வழி 2:
அதனுள் Notification என்னும் பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
வழி 3:
அங்கே இப்பணியிடம் குறித்த விபரங்களை முழுமையாகப் படிக்கவும்.
வழி 4:
பின், "Click here for New Registration" என்னும் பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
வழி 5:
அங்கே உங்களுக்கான விண்ணப்பம் தோன்றும். அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
வழி 6:
அவை அனைத்தும் சரியான முறையில் உள்ளதா என சரிபார்க்கவும்.
வழி 7:
அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு "Submit" என்னும் பட்டனை கிளிக் செய்யவும்.
வழி 8:
இறுதியாகப் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிற்காலத் தேவைக்காக நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












