தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) Junior Scientific Officer பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் (TNPSC) தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.
கடந்த 24.08.2019 அன்று இதற்கான தேர்வுகள் முடிவுற்று அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வும் நடைபெற்று முடிந்தது.
அதனைத் தொடர்ந்து, தற்போது மேற்கண்ட பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இது வரும் 21.10.2021 அன்று முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தடய அறிவியல் துறையின் 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணிகளுக்கான கலந்தாய்வு உள்ளிட்ட மேலும் விபரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு இங்கே கிளிக் செய்யலாம்.
நிர்வாகம் : தடய அறிவியல் துறை
தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
மொத்த காலிப் பணியிடங்கள் : 64
பணி : இளநிலை அறிவியல் அதிகாரி
பணி மற்றும் பணியிட விபரங்கள்:
- வேதியியல் - 40
- உயிரியல் - 14
- இயற்பியல் - 06
- இயற்பியல் மற்றும் வேதியியல் (பிரிவு: கணினி தடய அறிவியல்) - 04
வயது வரம்பு : 01.07.2019 அடிப்படையில் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : தடய அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரையில்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tnpsc.gov.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












