டி.என்.பி.எஸ்.சி., என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவி பயிற்சி அலுவலர் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு, கணினி வாயிலான தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி, ஆர்வமுள்ளவர்கள் ஆக.,16க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
மேலாண்மை: மாநில அரசு

பதவிகள் விவரம்
ü உதவி பயிற்சி அலுவலர் ( Assistant Training Officer (Stenography - English)
ü இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Junior Technical Assistant)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.08.2023
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1.07.2023 அன்று 32 வயது நிறைவடைந்திருக்கக்கூடாது. ஆதி திராவிடர், ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது. வயது வரம்பில் சலுகை கோரும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்
உதவி பயிற்சி அலுவலருக்கு ஊதியமாக, மாற்றியமைக்கப்பட்ட சம்பள முறை நிலை -13இன்படி, ரூ. 35,900 - ரூ.1,31,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இளநிலை தொழில்நுட்ப உதவியாளருக்கு ஊதியமாக, மாற்றியமைக்கப்பட்ட சம்பள முறை நிலை -11இன்படி, ரூ. 35,400 - ரூ.1,30,400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் 18.07.2023 படி அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள கல்வி தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
அரசு தொழில்நுட்ப தேர்வாணையம் கீழ் செயல்படும் நிறுவனத்தில், ஆங்கிலம் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மேலும், பள்ளி, கல்லூரி படிப்புகளில் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
· ஒரு முறை பதிவு கட்டணம் - ரூ.150/- இருப்பினும், ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை
· தேர்வுக் கட்டணம் - ரூ.150/-
மறக்காதீங்க நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்ப அறிவிக்கை நாள் - 18.07.2023
இணையம் வழி விண்ணப்பத்தை, 16.08.2023 அன்று இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க இயலும். பின்னர், அச்சேவை நிறுத்தப்படும்.
இணையவழி விண்ணப்பத்தை, 21.08.2023 - நள்ளிரவு 12.01 மணி முதல் 23.08.2023 இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம்.
எழுத்து தேர்வு இரண்டு தாள்களாக, வரும் அக்டோபர் 05ம் தேதி நடைபெறும்.
கணினி வழித்தேர்வு நடக்கும் நாள், நேரம்:
உதவி பயிற்சி அலுவலர்( சுருக்கெழுத்து-ஆங்கிலம்)
தாள் -1 பாடம், பட்டப்படிப்புத்தரம்
05.10.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை.
தாள் -2 பகுதி -அ கட்டாய தமிழ்மொழி தகுதி(10ம் வகுப்புத் தரம்), பகுதி -அ பொது அறிவு தேர்வு (பத்தாம் வகுப்பு தரம்)
05.10.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்
தாள் -1 பாடம், பட்டப்படிப்புத்தரம்
06.10.2023 முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை
கவனமாக வாசிக்கவும்...!
விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களின் புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்து கொள்ளுங்கள்.
மேலும், தங்கள் கல்வி மற்றும் பிற சான்றிதழ்களை கையில் வைத்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு விவரம்
முதல் தாளில், பட்டயப்படிப்பு தரம் சுருக்கெழுத்து-ஆங்கிலம் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும்.
இரண்டாம் தாள் இரண்டு பகுதிளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ்மொழி தகுதி தேர்வு(பத்தாம் வகுப்பு தரம்), இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.
இரண்டாம் தாள் பொது அறிவு, திறனாய்வு தேர்வு. இதில் 100, 150 வினாக்கள் 75, 25 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
தமிழ் தகுதித் தேர்வில், குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==
https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==
பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்...
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/tamil/14_2023_Tamil.pdf
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.tnpsc.gov.in/Document/english/14_2023_English.pdf


Click it and Unblock the Notifications












