தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் வெளியிடப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு Combined Engineering Subordinate Services Examination மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மொத்தம் 537 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 05.03.2021 முதல் 04.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப் பணியிடங்கள்:
Junior Draughting Officer பதவிக்கு 177+6 காலிப் பணியிடங்களும், பொதுப் பணித் துறையில் உள்ள Junior Draughting Officer பதவியில் 348 பணிகளும், Junior Technical Assistant பதவிக்கு 01 காலிப் பணியிடங்களும், இளநிலை பொறியாளர் பதவிக்கு 05 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி:
சிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ, Architectural Assistantship, Textile Manufacture, Handloom Technology போன்ற துறைகளில் டிப்ளமோ, 10, 12வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த பணியிடங்களுக்கு 01.07.2021 தேதியின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் :
Junior Draughting Officer, பொதுப் பணித் துறையில் உள்ள Junior Draughting Officer, Junior Technical Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கு லெவல் 11 அடிப்படையில் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையிலும், இளநிலை பொறியாளர் பணிக்கு லெவல் 13 அடிப்படையில் ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpscexams.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 05.03.2021 முதல் 04.04.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, டிஎன்பிஎஸ்சி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை :
ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய இணையதளங்கள்:
- அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.
- TNPSC CESE Notification 2021 : இங்கே கிளிக் செய்யவும்.
- நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் விபரங்களுக்கு :
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு இணையதள இணைப்புகளைக் காணவும். விண்ணப்பிக்க விரும்புவோர் 04.04.2021 தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


Click it and Unblock the Notifications












