பொறியியல் பட்டதாரிகளே..! ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 475 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.77 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் பட்டதாரிகளே..! ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்

பணி : ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள்

மொத்த காலிப் பணியிடங்கள் : 475

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

பணி: உதவி மின் பரிசோதகர்
காலியிடங்கள் :
12
ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
வயது வரம்பு : 39 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : உதவி பொறியாளர் (விவசாய பொறியியல்)
காலியிடங்கள் :
94

பணி : உதவி பொறியாளர் (சிவில்), (நீர் மேலாண்மை)
காலியிடங்கள் :
120

பணி : உதவி பொறியாளர் (சிவில்), (கட்டிடம்)
காலியிடங்கள் :
73

பணி : உதவி பொறியாளர் (மின்சாரத் துறை)
காலியிடங்கள் :
13

பணி : தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்
காலியிடங்கள் :
26

பணி : உதவி பொறியாளர் (சிவில்) (நெடுஞ்சாலைத் துறை)
காலியிடங்கள் :
123

பணி : உதவிப் பொறியாளர் (மீன் வளம்)
காலியிடங்கள் :
03

பணி : உதவி பொறியாளர் (சிவில்) (கடல் வாரியம்)
காலியிடங்கள் :
02

பணி : இளநிலை கட்டட வடிவமைப்பாளர்
காலியிடங்கள் :
15

ஊதியம் : மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்

வயது வரம்பு :

  • 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம், இண்டஸ்ட்ரியல் பொறியியல், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • விண்ணப்பக் கட்டணமாக ரூ.150-ம், பதிவுக் கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஒரு முறை பதிவு செய்யாதவர்கள் மட்டும் ரூ.200 செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

  • www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.06.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf என்ற இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC CESE Recruitment 2019 - Apply Online 475 AE Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X