தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது (TNPSC) 2022-ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி-யின் சிசிஎஸ்இ குரூப் 4(TNPSC CCSE Group IV) தேர்வுக்கான இறுதி கட்ட முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்க https://www.tnpsc.gov.in/document/finalresult/34_2022_publication.pdf, https://www.tnpsc.gov.in/ ஆகிய இணையதள லிங்குகளைக் கிளிக் செய்து காணலாம்.
தமிழக அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள் மற்றும், அதிகாரிகள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் நடத்தப்படும்? தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத் தேர்வு எப்போது நடத்தப்படும்? தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

இவ்வாறு கால அட்டவணை வெளியிடுவது, அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராவதற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது.
இந்நிலையில், தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், விஏஓ, ஜேஏ, எஃப்ஏ, பிசி (Typist, Steno Typist, VAO, JA, FA, BC) ஆகிய பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பானது 30.03.2022 அன்று டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்து தேர்வானது 24.07.2022 அன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இத்தேர்வின் முடிவுகள் 24.03.2023 அன்று வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் இப்பணிகளுக்கென நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி-யின் சிசிஎஸ்இ குரூப் 4 (TNPSC CCSE Group IV) தேர்வின் இறுதி கட்ட முடிவுகளானது இன்று (06.01.2024) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் TNPC Veterinary Assistant Surgeon பணிக்கென நடைபெற்ற எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் இறுதி முடிவுகளும் இன்று (06.01.2024) TNPSC-யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்.
இணையதள முகவரிகள்:
இந்தத் தகவல்களைப் பெற விரும்புவோர்,
https://www.tnpsc.gov.in/document/finalresult/34_2022_publication.pdf
ஆகிய இணையதள லிங்குகளைக் கிளிக் செய்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












