மூன்று சதவீதம் நிச்சயம்....! அறிவிப்பு என்னனு தெரியும்?

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்துடனும்னு நினைச்சு; ரா பகலா கண்விழிச்சு படிக்கும் இளைஞர் பட்டாளம்; எப்படா அறிவிப்பு வரும்னு காத்திருந்த தேர்வர்களுக்கு, அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகிறது டி.என்.பி.எஸ்.சி., என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
மேலாண்மை : மாநில அரசு

அடுத்தடுத்த அறிவிப்புகள்.... டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் குஷி...!

பணி விவரம்

· நில அளவர்
· வரைவாளர்
· அளவர்
· உதவி வரைவாளர்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.08.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 1089

வயது வரம்பு

· நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கு 01.07.2022 நாளன்று, 32 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.

· தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியின் கீழுள்ள அளவர், உதவி வரைவாளர் பதவிகளுக்கு 01.07.2022 நாளன்று, 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

· ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை .

கல்வி தகுதி

நில அளவர்(Field Surveyor)

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு நிறுவனத்தில், சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது தேசிய தொழிற்பயிற்சி கவுன்சிலால் வழங்கப்படும் சர்வேயர் வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெட்ராஸ் இன்ஜினியரிங் குழுமத்தால் வழங்கப்பட்ட ராணுவ வர்த்தக சர்வேயர் (களம்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வரைவாளர்(Draftsman)

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது தொழில் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலில் வழங்கப்பட்ட வரைவாளர் (சிவில்) வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெட்ராஸ் இன்ஜினியரிங் குழுமத்தால் வழங்கப்பட்ட ராணுவ வர்த்தக வரைவாளர் (களம்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அளவர்/உதவி வரைவாளர்(Surveyor-cum Assistant Draughtsman)

மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தால், ஜூலை 1952 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்திய பாடத்திட்டத்தின் கீழ் டிராஃப்ட்ஸ்மேன் ஷிப் (சிவில்) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தலைவர், தொழில்நுட்ப சோதனை வாரியம், மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் மற்றும் மையத்தால் வழங்கப்பட்ட ராணுவ வர்த்தக வரைவாளர் (களம்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது கைவினைஞர் பயிற்சி மையத்தால் வழங்கப்படும் வரைவாளர் (சிவில்) சான்றிதழ் அல்லது சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்றிருத்தல் அவசியம்.

விண்ணப்ப கட்டணம்

· ஒரு முறை பதிவு கட்டணம் - ரூ.150/-
· தேர்வுக் கட்டணம் - ரூ.100/-

தேர்வு முறை

விண்ணப்பதார்கள் ஒரே கட்டமாக எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், நியமனங்கள் இட ஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்து தேர்வானது 06.11.2022 அன்று காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 02.00 மணி முதல் 05.00 மணி வரையும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி, திறமை மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக, கடைசி நாளான ஆகஸ்ட் 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும். திரும்பவும் சொல்றேன் மறக்காதீங்க...!

கவனமாக வாசிக்கவும்...!

அடுத்தடுத்த அறிவிப்புகள்.... டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் குஷி...!

· பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்கவில்லை எனில், உரிய நடைமுறைகளுக்கு பின் நிராகரிக்கப்படும்.

· மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளன.

· ஏன்பா தமிழ் மொழியிலும் போதிய அறிவு இருக்கனும்பா.... தயவு செஞ்சு மறந்துடாதீங்க...!

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://www.tnpsc.gov.in/Tamil/Home.aspx

பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா?

https://www.tnpsc.gov.in/english/notification.aspx

https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamil Nadu Government Staff Selection Commission has given a pleasant surprise to the aspirants by releasing the notification for 1089 vacancies in the posts of Land Surveyor, Draftsman, Surveyor and Assistant Draftsman.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+