டேராடுனில் உள்ள இராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில நாடு முழுவதும் தேர்வு நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் இதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : டேராடூன், இராணுவ கல்லூரி
தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
நிர்வாகம் : RIMC Admission
கல்வித் தகுதி: ஏழாம் வகுப்பு படித்து வருவோர், அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 01.07.2022 ஆம் தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட இராணுவ கல்லூரியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 30.10.2021 தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினர் - ரூ.600
எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.555
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் இடம் : இந்த எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னை நகரில் மட்டுமே நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications












