தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNPFC) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNPFC)
மொத்த காலிப்பணியிடங்கள் : 05
வயது வரம்பு : 1.11.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduate, CA, CWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
- Assistant Manager - ரூ. 56,100 முதல் ரூ1,77,500
- Personal Assistant to Chairman and MD - ரூ. 36,200 முதல் ரூ. 1,14,800
- Junior Assistant - ரூ.19,500 முதல் ரூ.1,12,400
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpowerfinance.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து 31.01.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
The Financial Officer, 490 Tufidco-Powerfin, Tower Anna Salai, Nandhanam, Chennai - 600 035
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpowerfinance.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












