ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 240-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.19 முதல் ரூ.1.19 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை!

நிர்வாகம் : தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

உதவிப் பொறியாளர்
காலிப் பணியிடங்கள் : 78
ஊதியம் : மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்

சுற்றுச்சூழல் விஞ்ஞானி
காலிப் பணியிடங்கள் : 70
ஊதியம் : மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்

உதவியாளர் (இளநிலை உதவியாளர்)
காலிப் பணியிடங்கள் : 38
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

தட்டச்சர்
காலிப் பணியிடங்கள் : 56
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சிவில், வேதியியல், சுற்றுச்சூழல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், வேதியியல், உயிரியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் தொழில்நுட்பம், மைக்ரோபயோலஜி, பயோகெமிஸ்ட்ரி, தாவரவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் எம்.எஸ்சி முடித்தவர்கள், இளங்கலை பட்டத்துடன் கணினி தொடர்பான 6 மாத படிப்பை முடித்தவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பிரிவில் முதுகலை சான்றிதழ் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இப்பணியிடத்திற்கு 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி, விதவைகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpcb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPCB Recruitment 2020 – Apply Online for Assistant & Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+