சட்டம் படிச்சிருக்கீங்க.... அப்ப உங்களுக்கு ஓர் வாய்ப்பு...!

சட்ட ஆலோசகர் காலிப் பணியிடங்களுக்கு, ஆர்வமும், தகுதியும் இருக்கும் நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

நிர்வாகம்: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்(TNPCB)

சட்ட ஆலோசகர் ஆக ஒரு வாய்ப்பு...!

மேலாண்மை: மாநில அரசு

காலியிடங்கள்: 7

பதவியின் பெயர் - சட்ட ஆலோசகர்( Law Consultant)

விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 5

சம்பளம்: ரூ.50,000 - ரூ.75,000

விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன்

கல்வி தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில், இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 'Degree in Law, or LLB' தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை

சட்ட ஆலோசகர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக மட்டுமே தெரிவு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை சொடுக்கி, தெரிந்து கொள்ளுங்கள்...!

விண்ணப்பிக்கும் முறை

· பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்கவில்லை எனில், உரிய நடைமுறைகளுக்கு பின் நிராகரிக்கப்படும்.

·ஆர்வம், தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் வழங்கப்பட்ட அறிவிப்பாணையின் கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

· மறக்காதீங்க...! 05.09.2022க்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள சலுகை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

நோட் பண்ணிக்கோங்க...!

ஆங்கிலம், தமிழ் மொழியில் போதிய அறிவு இருக்கனும்.... இந்த பணியிடம் என்பது ஒப்பந்த அடிப்படையிலானது; ஓராண்டுக்கு பின் நிரந்தர பணி கோர முடியாது... அதனால தயவு செஞ்சு மறந்துடாதீங்க...!

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Member Secretary,

Tamil Nadu Pollution Control Board,

No.76, Mount Salai,

Guindy,

Chennai - 600 032.

வயது வரம்பு, தளர்வு, பணி நடைமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அறிவிப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தளம், மாதிரி விண்ணப்பங்கள், பணியிட அறிவிப்பு

ஒரு முறை சொடுக்கி மறக்காமல் படித்து பாருங்க...!

https://drive.google.com/file/d/1c-EWih9_6gWKY53LKHYW01iqYG2tPm1L/view

https://drive.google.com/file/d/1c-EWih9_6gWKY53LKHYW01iqYG2tPm1L/view

https://tnpcb.gov.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Pollution Control Board also known as TNPCP has released a notification for seven Law Consultant vacancies.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+