தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் (TNJFU) காலியாக உள்ள Senior Research Fellow பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.33 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Senior Research Fellow
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Masters of Fisheries Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.31,000 முதல் ரூ.33,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு தேதி : 25.01.2022 அன்று நடைபெறும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnjfu.ac.in அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பைக் காணவும்.