எம்.இ, எம்.எஸ்சி தேர்ச்சியா? ரூ.22 ஆயிரம் ஊதியத்தில் தமிழக TNJFU துறையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் (TNJFU) காலியாக உள்ள System Programmer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் (TNJFU) காலியாக உள்ள System Programmer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.22 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.இ, எம்.எஸ்சி தேர்ச்சியா? ரூ.22 ஆயிரம் ஊதியத்தில் தமிழக TNJFU துறையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : System Programmer

மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்.இ, எம்.எஸ்சி, எம்சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், Web Designing Software, HTML, SQL, JavaScript போன்றவற்றில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.22,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnjfu.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNJFU Recruitment 2022: Application invited for System Programmer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X